பெரியார் குறித்து ரஜினி பேசியவிவகாரத்தில் வழக்கு தொடர்ந்தால், அது வழக்கு தொடுப்பவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது தி.க.வின் நிலைமை ஆப்பசைத்த குரங்குபோல் உள்ளது. ஈவெரா அன்றைக்கு இந்து கடவுள்களை இழிவுபடுத்தியதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. வழக்குக்கு சென்றால் அவர்கள்தான் உள்ளே செல்வார்கள்.
இந்து கடவுளை இழிவுப்படுத்தி எதிர்வினை பெற்ற வீரமணி மன்னிப்பு கேட்காதபோது, நாகரிகம், பண்பாடு குறித்து ரஜினிக்கு பாடம்எடுக்க வீரமணிக்கு வெட்கமாக இல்லையா?
அவரவர் செய்த வினைக்கு எதிர்வினை நிச்சயம் உண்டு. திகவுடனான தொடர்பை திமுக முறிக்கவில்லை என்றால் விரைவில் மிக பெரிய விளைவுகளை சந்திக்கும் என்றார்.