தமிழகம்

சுற்றுலா, தொழில் பொருட்காட்சியில் நெருப்பு இல்லாமல் உணவு சமைக்கும் போட்டி: ஜனவரி 25-ல் நடத்தப்படுகிறது

செய்திப்பிரிவு

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி கடந்த ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி முதல் தீவுத்திடலில் நடந்து வருகிறது.

இங்கு உள்ள ஓட்டல் தமிழ்நாடு விடுதியில் வரும் ஜன.25-ம் தேதி காலை 10 மணிக்குதீயில்லாத சமையல் போட்டி நடைபெற உள்ளது. நெருப்பை பயன்படுத்தாமல் சமைக்கப்படும் உணவுகள் பெரும்பாலும் நார்ச்சத்து உள்ளவையாக இருக்கும்.மேலும் சுற்றுச் சூழலையும் பாதிக்காது.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள், செந்த பயணச் செலவில், சமைக்கத் தேவையான பொருட்களை தாங்களே கொண்டுவர வேண்டும். போட்டிகளில் நடுவர்களின் முடிவே இறுதியானது.

இதில் போட்டியிட்டு முதலிடம் பிடிக்கும் நபருக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பரிசு கூப்பன், இரண்டாமிடம் பெறுபவருக்கு ரூ.3 ஆயிரம் பரிசுக் கூப்பன், மூன்றாமிடம் பெறுபவருக்கு ரூ.2 ஆயிரம் பரிசுக் கூப்பன் வழங்கப்படும். பரிசுகள் மாற்றத்தக்கவையோ பரிமாற்றம் செய்யக் கூடியவையோ அல்ல. பரிசை பணமாக எடுத்துக்கொள்ள முடியாது. 6 மாத காலத்துக்குள் பரிசுக் கூப்பனை பயன்படுத்தி கழகத்துக்கு சொந்தமான விடுதிகளில் தங்கிக்கொள்ளலாம்.

சமூக ஊடக பக்கங்கள் facebook@tnttdc, twitter@twttdc, instagram "enchantingtamilnadu" ஆகியவை மூலம் போட்டியில் கலந்துகொள்ள பதிவு செய்யலாம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சுற்றுலா வளாகம், வாலாஜாசாலை, சென்னை-2 என்ற முகவரியில் அணுகலாம். 04425333333, 04425333850-54 ஆகிய எண்களில் அழைக்கலாம்.

SCROLL FOR NEXT