தமிழகம்

உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் டாஸ்மாக் கடைகள்: உயர் நீதிமன்றக் கருத்துக்கு விஜயகாந்த் வரவேற்பு

செய்திப்பிரிவு

உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் டாஸ்மாக் கடைகளைக் கொண்டுவருவதற்கான உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கு தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளினால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதினால் அரசியல் அமைப்பு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் கிராம பஞ்சாயத்துத் தலைவர் தீர்மானம் நிறைவேற்றியத்தை ஏற்று தமிழக அரசு சட்டம் கொண்டுவர உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதை தேமுதிக சார்பில் வரவேற்கிறோம்.

தமிழக அரசு பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் நலன் கருதி உள்ளாட்சி அமைப்புகளில் கீழ் டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்தவும், கால நேரத்தை வரையறை செய்யவும் இதுபோன்று சட்டம் கொண்டு வருவதன் மூலம் நமது காலாச்சாரம், இளைஞர்களின் எதிர்காலம், பெண்களின் பாதுகாப்பு போன்றவை பாதுகாக்கப்படும்.

மேலும் பாலியல் வன்கொடுமை, சாலை விபத்துகள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே தமிழக அரசு உயர் நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT