தமிழகம்

இளங்கோவனுக்கு எதிரான போராட்டத்தில் நெல்லை ஆற்றுப் பாலம் சுவரில் ஏறி பெண் மேயர் தற்கொலை மிரட்டல்

செய்திப்பிரிவு

பிரதமர் - முதல்வர் சந்திப்பை விமர்சித்த ஈ.வி.கே.எஸ்.இளங் கோவனை கண்டித்து திருநெல்வேலியில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று வண்ணார்பேட்டையிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட அதிமுக மகளிரணியினர் அறிவித்திருந்தனர்.

இதனால் திருநெல்வேலி காங்கிரஸ் அலுவலகம்முன் போலீஸார் குவிக்கப்பட்டனர். திடீரென்று காங்கிரஸ் அலுவலகத்துக்கு முன்பு மகளிரணியினர் வந்தனர். அவர்கள் கைகளில் துடைப்பமும், செருப்பு களும் இருந்தன. அவற்றை அங்கி ருந்த இளங்கோவன் படத்தின்மீது வீசினர்.

பின்னர் அவர்கள் காங்கிரஸ் அலுவலகத்தினுள் நுழைய முயன்ற போது போலீஸார் தடுப்புகம்பிகளை அமைத்து தடுத்தனர். இதனால் போலீஸாருக்கும், அதிமுகவினருக் கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட் டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதை அடுத்து, அங்கிருந்த போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இந்த தள்ளுமுள்ளுவில் சிக்கி கீழே விழுந்த மேயர் புவனேஸ்வரிக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அதிமுகவினர் அங்கி ருந்து ஊர்வலமாக திருநெல் வேலி சந்திப்பை நோக்கி சென்றனர். ஊர்வலத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த மேயர், திடீ ரென்று ஆவேசமடைந்து தாமிர பரணி ஆற்றுப் பாலத்தின் சுவர் மீது ஏறி, இளங்கோவனை கண்டித்து கோஷமிட்டார்.

`இளங்கோவன் மன்னிப்பு கேட் காவிட்டால் ஆற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்யப் போகிறேன்’ என அவர் மிரட்டல் விடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீஸார் அவரை சமாதானம் செய்து பத்திரமாக கீழே இறக்கிவிட்டனர். ஏற்கெனவே காயமடைந்திருந்த அவர், பாளை யங்கோட்டை தனியார் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT