தமிழகம்

விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸார் நடத்திய தடியடிக்கு ராமதாஸ் கண்டனம்

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத் திரத்தில் அப்பாவி மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் கண்டனத்துக்குரியது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டம் சங்கரா புரத்தை அடுத்த சேஷசமுத் திரத்தில் அப்பாவி மக்கள் மற்றும் பெண்கள் மீது மிகக் கொடிய வன்முறை மற்றும் ஒடுக்குமுறையை காவல்துறை யினர் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். மனித உரிமைகளை சற்றும் மதிக்காமல் காவல்துறை நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்துக் குரியது. சங்கராபுரம் அருகிலுள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத் தினரும், தாழ்த்தப்பட்ட பிரிவி னரும் வசித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களுக்கு சொந்தமான அம்மன் கோயிலில் தேரோட்டம் நடத்த வேண்டும் என்று விரும்பினர். 2 சமூகத்தினருக்கும் இடையே மோதல் மூண்டுள்ளது. மோதலை கட்டுப்படுத்துவதற்கு வரவழைக்கப்பட்ட காவல் துறையினர் கண்மூடித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுபோன்ற அடக்குமுறை களை மன்னிக்க முடியாது. இறுதியாக 11 பெண்கள், 7 சிறுவர் உட்பட மொத்தம் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் சட்ட விரோதக் காவலில் வைத்து கொடுமைப்படுத்தப்படுகின்றனர். சேஷசமுத்திரம் ஒடுக்குமுறைக்கு காரணமான காவல்துறை துணைத்தலைவர் சுமித் சரண், கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த தாக்குதல்கள் குறித்து விசாரிப்பதற்காக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவைத் தலைவர் கே.பாலு தலைமையில் உண்மை கண்டறியும் குழு நாளை (இன்று) அங்கு அனுப்பி வைக்கப்படும். இது தொடர்பாக தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள், தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றில் புகார் செய்யப்படும்

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT