சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மதுரையில் வாக்கத்தான் பேரணி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்கள் சார்பில் மாரத்தான் நடைபெற்றது.
பேரணியை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மாரியம்மன் தெப்பக்குளத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோர் உடன் இருந்தனர்.
வாக்கத்தான் நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கல்லூரி மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி பேரணியில் கலந்து கொண்டனர்.
ஹெல்மெட் அணிவதன் அவசியம் உள்ளிட்ட போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி அமைந்தது.