சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே உள்ள நூலகத்தை திறக்க வலியுறுத்தி, சாலையில் அமர்ந்து புத்தகம் படிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர். படம்:எஸ்.குரு பிரசாத் 
தமிழகம்

மூடிய நூலகத்தை திறக்கக்கோரி சாலையில் அமர்ந்து புத்தகம் வாசித்த இளைஞர்கள்

செய்திப்பிரிவு

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அன்னதானப்பட்டியில் மூடிய நூலகத்தை திறக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலையில் அமர்ந்து புத்தகம் வாசிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 49-வது வார்டு அன்னதானப்பட்டி, அகரமஹால் மெயின் ரோட்டில் உள்ள நூலகம் கடந்த 10 ஆண்டாக பூட்டி கிடக்கிறது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த, பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி சம்பந்தமான நூல்களையும், போட்டித் தேர்வுக்கு தயாராக தேவையான பொது அறிவு நூல்களை படிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

நூலகத்தை திறக்கக்கோரி சேலம் கிழக்கு மாநகர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சேலம் ஆட்சியர், மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், நேற்று நூலகத்தை திறக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிழக்கு மாநகர் செயலாளர் பெரியசாமி தலைமையில் இளைஞர்கள் சாலையில் அமர்ந்து நூல்களை வாசித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT