தமிழகம்

ஈரோட்டில் அதிமுகவினர் போராட்டம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டை முற்றுகையிட முயற்சி

செய்திப்பிரிவு

ஈரோட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோ வனின் வீட்டை முற்றுகையிட முயன்ற அதிமுகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பியிடம் அதிமுகவினர் மனு கொடுத்தனர்.

பிரதமர், முதல்வர் சந்திப்பு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரி வித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரி வித்து அதிமுகவினர் தமிழகம் முழுதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாநகராட்சி துணை மேயர் கே.சி.பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் நேற்று காலை பெரி யார் நகர் நுழைவு வாயிலில் இருந்து கச்சேரி சாலையில் உள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட் டுக்கு ஊர்வலமாக புறப்பட்டனர். இளங்கோவனின் உருவ பொம் மையை ஊர்வலத்தில் இழுத்து சென்றனர்.

தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவி தலை மையில் காங்கிரஸ் கட்சியினர் இளங் கோவனின் வீட்டில் திரண்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு எஸ்.பி சிபி சக்கரவர்த்தி தலைமையில் போலீஸார் கச்சேரி வீதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டனர். கச்சேரி வீதியை இணைக்கும் தெருக்களிலும் இரும்பு தடுப்புகள் அமைத்தனர். ஊர்வலமாக வந்த அதிமுகவினரை போலீஸார் அங்கு தடுத்து நிறுத்தினர்.

அப்போது மாநகர மாவட்ட அதிமுக செயலாளரும், மொடக் குறிச்சி தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.என்.கிட்டுசாமி, ஆவின் தலை வர் பி.சி.ராமசாமி உள்ளிட்ட அதிமுகவினர் இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்தனர்.

அதன் பின்னர் அங்கிருந்து ஊர் வலமாக எஸ்.பி அலுவலகம் சென்ற அதிமுகவினர், எஸ்.பி சிபிசக்கர வர்த்தியிடம் மனு கொடுத்தனர். மனுவில், ‘ஈரோட்டில் பத்திரிகை யாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பிரதமர், முதல்வர் சந்திப்பை கொச்சைப்படுத்தியும், வன்முறையைத் தூண்டும் விதத்தி லும் பேசியுள்ளார். எனவே, அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித் துள்ளனர். மேலும், இதுகுறித்த பத்திரிகை செய்தி மற்றும் வீடியோ ஆதாரங்களையும் கொடுத்தனர்.

SCROLL FOR NEXT