சிவகங்கை அருகே கண்டிப்பட்டி அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் தை நான்காம் நாள் சப்பர விழா, ஐந்தாம் நாள் பொங்கல் விழா, மஞ்சு விரட்டு விழாக்கள் நடக்கின்றன.
நேற்று அனைத்து மதத்தினரும் இணைந்து பொங்கல் வைத்தனர். தொடர்ந்து தொழுவில் இருந்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
முன்னதாக காலை 10 மணிமுதல் கண்மாய் பொட்டல், வயல்வெளியில் 700-க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திருப்பத்தூர் அருகே கோவில்பட்டியைச் சேர்ந்த விஜயராகவன் (44) மாடு முட்டி உயிரிழந்தார். மேலும் கல்லல் அருகே மஞ்சுவிரட்டுக்கு வந்த முதியவர் கார் மோதி உயிரிழந்தார்.