தருமபுரி அடுத்த சோலைக் கொட்டாய் பகுதியில் அதிமுக சார்பில் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுகூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் முன்னிலையில் பாமக-வைச் சேர்ந்த 200 பேர் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 250 பேர் அதிமுக-வில் இணைந்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் சோலைக்கொட்டாய் பாமக-வின் பலம் மிகுந்த ஊராட்சிகளில் ஒன்று. இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த பாமக-வினர் அதிமுக-வில் இணையும் நிகழ்ச்சி அதே கிராமத்தில் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கூடுதலாக காவல்துறை பாதுகாப்பு அளிக்கப் பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் அமைச்சர் பழனி யப்பன் பேசும்போது, ‘‘முதல்வர் கனவுடன் பாமக வேட்பாளரை அறிவித்துள்ளது.
ஆனால் வட தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே அக்கட்சிக்கு ஆதரவு உள்ளது. எஞ்சிய மாவட்டங்களில் அந்த கட்சிக்கு தொண்டர்கள் இருப்பது சந்தேகமே.
தென் மாவட்டங்களில் அந்தக் கட்சிக்கு தேர்தலின்போது வேட்பா ளர்கள் கிடைப்பதே சிரமம்” என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட் டது. இருப்பினும் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே முன்னாள் அமைச்சரும், திமுக-வில் இருந்து நீக்கப்பட்டவருமான முல்லைவேந்தன் தேமுதிக-வில் இணைவது உறுதியாகி இருப்பதாக தெரிகிறது. இதுவும் தருமபுரி அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியில் இணைவதற்கு முன்பாக தேமுதிக தலைவர் விஜய காந்தை இன்று சென்னையில் முல்லைவேந்தன் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா கவும் கூறப்படுகிறது.
சந்திப்புக்கு பிறகு ஓரிரு நாட்களில், தன் ஆதரவாளர் களுடன் அவர் தேமுதிக-வில் இணையும் நிகழ்ச்சி நடக்கும் என்று தெரிகிறது.