தமிழகம்

3.34 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஆர்.கிருஷ்ணகுமார்

கோவை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் விழாவில் நகராட்சி நிர்வாகம் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.

பின்னர் இது குறித்து அமைச்சர் பேசும்போது ‘‘கடந்த வருடம் 3.33 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது இந்த வருடம் 3.34 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.

மேலும் நகர்ப்புற சுற்றுப்புறங்களில் 1581 மையங்களில் இந்த சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

ரயில் நிலையம் விமான நிலையம் காந்திபுரம் கோயில்கள் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொது சுகாதாரம் அங்கன்வாடி பணியாளர்கள் என 6536 பணியாளர்கள் இந்த சொட்டு மருந்து வழங்கும் முகாமில் பணி செய்து வருகின்றனர் சொட்டு மருந்து மிகவும் பாதுகாப்பானது.

உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் பெற்றுள்ளது இந்த சொட்டு மருந்தினால் எந்தவித பாதிப்பும் இல்லை மேலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கெனவே கொடுத்திருந்தாலும் இந்த முறையும் இந்த சொட்டு மருந்தை கொடுக்கலாம்’’ என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT