தமிழகம்

கிழக்கு கடற்கரைச் சாலை சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும்: பேரவையில் அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

கிழக்கு கடற்கரை சாலையை சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் என்.ஆர்.ரங்கராஜன், ‘‘தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைத்தால் கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கப்படும் என மத்திய நெடுஞ்சாலை துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார். இது குறித்து தமிழக அரசின் நிலை என்ன’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ‘‘கிழக்கு கடற்கரைச் சாலையை சீரமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்’’ என்றார்.

SCROLL FOR NEXT