மனைவி, மகன்கள் (கண்ணாடி அணிந்திருப்பவர்கள்) மற்றும் தொகுதியில் உள்ள குழந்தைகளுடன் எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன் 
தமிழகம்

மக்களோடு பொங்கல் விழாவைக் கொண்டாடிய மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன்

எஸ்.ஸ்ரீனிவாசகன்

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் விழாக்காலங்கள் அனைத்தையும் தொகுதி மக்களோடு இணைந்து கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஆங்கில புத்தாண்டு ,பொங்கல் திருநாள் என ஒவ்வொரு விழா நாட்களிலும் மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டு பகுதிகளை தேர்வு செய்து அங்குள்ள மக்கள் பங்கேற்கிற வகையில் போட்டிகளை நடத்தி தாமே நேரடியாக பரிசுகளும் வழங்கி வருகிறார்.

அந்த வரிசையில் இந்த ஆண்டும் தைப் பொங்கலை ஒட்டி மதுரை மாநகராட்சி வார்டு 8 கொ.சாலை, மருதுபாண்டியர் தெரு, தாசில்தார் தெரு, 40 வீடு பர்மா காலனியில் இன்று (ஜன.17) சமத்துவ பொங்கல் நடைபெற்றது.

பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக கோலப்போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்தி பரிசுகளை தமது குடும்பத்தினர் மற்றும் கட்சியினரோடு இணைந்து வழங்கினார்.

SCROLL FOR NEXT