தமிழகம்

தமிழர் உரிமையை மீட்டெடுத்தது அதிமுக அரசே: அமைச்சர் உதயகுமார் பெருமிதம்

எஸ்.ஸ்ரீனிவாசகன்

தமிழர் உரிமையை மீட்டெடுத்தது 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டை சிறப்பாக அதிமுக அரசு நடத்திவருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு ஓய்வுபெற்ற நீதியரசர் மாணிக்கம் அவர்களின் மேற்பார்வையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுள்ளார். முன்னதாக கிராமக் கமிட்டியின் சார்பாக விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதன் பின் வாடிவாசல் முன்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

கோயில் காளைகள் அவிழ்த்து விடுபட்டு மரியாதை செய்யப்பட்டன. இன்றைய போட்டியில், 700 காளைகளும் 936 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

அமைச்சர் ஆர்.பி., உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

தமிழர்களின் உரிமையான பாரம்பரிய ஜல்லிகட்டு போட்டி உரிமையை மீட்டெடுத்தது நமது அதிமுக அரசு தான். கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிகட்டு போட்டியை அதிமுக அரசு சிறப்பாக நடத்தி வருகிறது. தற்போது நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டிற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன

முதல்வர் ஜல்லிக்கட்டுக்கு நினைவு தூண் அமைக்கப்படும் என்று கூறினார் அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிக்கு நினைவாக நினைவுத் தூண் அமைக்கும் இடம் அலங்காநல்லூரிலா அல்லது பாலமேட்டிலா அல்லது இரண்டுக்கும் நடுவில் அமைப்பதா என்று பொது மக்களின் கருத்துகளை கேட்டு அதை முதல்வர் துணை முதல்வர் கவனத்திற்கு எடுத்துச்சென்று அமைக்கப்படும் என்று அவர் கூறினார்

SCROLL FOR NEXT