தமிழகம்

சட்டப்பேரவை தேர்தலில் பிரதான கட்சிகள் சார்பில் மீனவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?

என்.சுவாமிநாதன்

ஆரோக்கியபுரம் தொடங்கி நீரோடி காலனி வரை சற்றேறக்குறைய 67 கிலோ மீட்டரில் 46 கிராமங்களாக பரந்து விரிந்து கிடக்கிறது மீனவ கிராமங்கள். அரசு ஆவணப்படி லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்றனர்.

குளச்சல், கிள்ளியூர்

கடலுக்கு செல்லும் மீனவர் கள் மாயமாவதும், சிறை பிடிக் கப் படுவதும் இங்கே தொடர்கதையாக உள்ளது. மீட்பு பணிக்கு ஹெலி காப்டர் வசதி தேவை என்ற கோரிக்கை நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கிறது. கன்னியா குமரி மீனவர்களின் பிரச்சினை களுக்கு சட்டப்பேரவையில் குரல் கொடுக்க மீனவ பிரதிநிதிகள் யாரும் இல்லை.

இம்மாவட்டத்தில் மொத்த முள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் குளச்சல், கிள்ளியூர் தொகுதிகளில் மீனவர் வாக்கு கணிசமாக உள்ளது. இவ்விரு தொகுதிகளிலும் பிரதான கட்சிகள், மீனவர்களை வேட்பாளர்களாக வரும் சட்டமன்ற தேர்தலில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.

நிவாரணம் கிடைப்பதில்லை

தெற்கு எழுத்தாளர் இயக்கத் தலைவர் தமிழ்செல்வன் கூறும்போது, ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 170-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போயிருக்கின்றனர்.

கடலில் மீன்பிடிக்க சென்று 7 ஆண்டுகள் வரை காணாமல் போனவரை இறந்தவராக கருத வேண்டும் என, சட்டம் இருந்தும் அரசும், மீன் துறையும் இதை செயல்படுத்துவதில்லை. இதை 2 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் கிடக்கிறது. இதனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசிடமிருந்து நிவாரணம் கிடைக் காமல் பசியும், பட்டினியுமாக வாழ்கின்றனர். காணாமல் போகும் மீனவர் களை உடனடியாக கண்டுபிடிக்க குளச்சலை மையப்படுத்தி ஒரு துரித இயந்திர படகும், கன்னியாகுமரியை மையப்படுத்தி ஒரு துரித இயந்திர படகும், கடல்மேல் வான்வழியாக தேடி கண்டுபிடிக்க கன்னியாகுமரியில் நிரந்தரமாக ஒரு ஹெலிகாப்டரும் வேண்டும்.

2 லட்சம் வாக்குகள்

இதேபோல் மணவாளக் குறிச்ச்சி மணல் ஆலையால் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்கள் தான். ஆனால் அவர்களின் பாதிப்பு குறித்து சொல்ல பிரதிநிதித்துவம் இல்லை. மாவட்டத்தில் மொத்தம் இரண்டு லட்சம் மீனவர் வாக்குகள் உள்ளன. இதில் உள்நாட்டு மீனவர்களின் வாக்கு மட்டும் 40 ஆயிரம். ஆனால், மீனவர்களுக்கு பிரதான கட்சிகள் போதிய வாய்ப்பு வழங்குவதில்லை. அதனால் தான் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்படுவதில்லை.

பிரதான கட்சிகள் மீனவர் களுக்கு வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் கட்சி சார்பற்று, அனைத்து மீனவ அமைப்புகளும் இணைந்து தேர்தல் பணியாற்ற அழைப்பு விடுப்போம். எங்கள் நிலைப்பாடு குறித்து அனைத்து கட்சிகளின் தலைமைக்கும் தெரி யப்படுத்த உள்ளோம்’ என்றார்.

கடலில் மீன்பிடிக்க சென்று 7 ஆண்டுகள் வரை காணாமல் போனவரை இறந்தவராக கருத வேண்டும் என, சட்டம் இருந்தும் அரசு செயல்படுத்துவதில்லை.

SCROLL FOR NEXT