விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டது.
விருதுநகரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த வளாகத்தில் கூடுதல் எஸ்.பி. அலுவலகமும் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் நேற்று மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மத்திய மண்டல ஐ.ஜி.சண்முகராஜேஸ்வரன், எஸ்.பி. பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகள் மற்றும் மூலிகை செடிகளை நட்டுவைத்தனர்.
இந்த மூலிகைத் தோட்டத்தில் சந்தனம், திருநீற்றுப் பச்சிலை, வல்லாரை, நிலவேம்பு, திப்பிலி செடிகளும், பொன்னாவாரை செடி, மருது செடி, சங்கன்குப்பி செடி, எழுமிச்சை, இலுப்பை, பூவரசு, வேம்பு மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.
இவைதவிர கருங்குறிஞ்சி செடி, இன்சுலின் செடி, பிரண்டை கொடி, மா, எட்டி புங்கை, சரக்கொன்றை, நாவல் மரக்கன்றுகளும், நெந்நாயுருவி செடி, முடக்கற்றான் உள்ளிட்ட ஏராளமான மூலிகைச் செடிகளும் நடப்பட்டுள்ளன