‘‘நான் இந்தியன் இல்லை என்று கூறுபவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்,’’ என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
காரைக்குடியில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர்: தன்னுடைய ஊழலை மறைக்கவும் கலவரத்தை தூண்டவும் ப.சிதம்பரம் குடியுரிமை சட்டத்தை எதிராக பேசி வருகிறார்.
106 நாட்கள் சிறையில் இருந்ததால் அவருக்கு மூளை குழம்பி விட்டது. நான் இந்தியன் இல்லை என்று கூறுபவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்.
திமுக, காங்கிரஸ் கூட்டணி இயற்கைக்கு மாறான கூட்டணி. அதனால் அவர்களாகவே வீழ்வார்கள். தமிழகத்தை மையமாக கொண்டு இயங்கும் பயங்கரவாதிகளை தமிழக அரசு மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்
திமுக தலைவர் ஸ்டாலின் பயங்கரவாதிகளுக்கு துணை போகிறாரா? அல்லது அமைதியாக இருந்து அனுமதிக்கிறாரா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது, என்று கூறினார்.