தமிழகம் விரைவில் நிதி மையமாக மாறும் என தொழில்துறை செய லாளர் சி.வி.சங்கர் தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் செப்டம்பர் 9,10 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத் தப்படுகிறது. இதையொட்டி, வங்கிப் பிரிவினருடனான கலந் தாய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் 15-க்கும் மேற்பட்ட பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு வங்கிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தை தொடங்கி வைத்து தொழில்துறை செயலாளர் சி.வி.சங்கர் பேசியதாவது:
இந்த மாநாட்டின் மூலம் அதிகளவு முதலீட்டை பெறவுள் ளோம். இதன்மூலம் தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள திறன் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாட்டின் தொழிற்சாலை உற்பத்தி யில் தமிழகத்தின் பங்கு 11 சதவீதம். கடந்த 15 ஆண்டுகளில் 17.6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நேரடி அந்நிய முதலீட்டை தமிழகம் பெற்றுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தமிழகம் வளர்ந்து வருகிறது. இங்கு ஏராளமான தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் உள்ளதால், கல்விக் கடன்கள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளன. தமிழகம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் 3-ம் இடத்தில் உள்ளது. நாட்டின் மிக முக்கியமான நிதி மையமாக தமிழகம் விரைவில் உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தமிழகத்தில் வங்கிகள் அதிகளவில் கிளைகள், ஏடிஎம்கள், நிதி தொடர்பான கல்வி மையங்களை ஏற்படுத்தியுள் ளன. மேலும், சிறு குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள மாநிலம் என்பதால், மற்றுமொரு நிதி மையத்துக் கான தேவை தற்போது ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 40 ஆயிரம் தொழிற்சாலைகள் உள்ளன. அதில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு நிறுவனங்களும் அடங்கும். 30 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள மனிதவளம் வெளிநாட்டு நிறுவனங்களால் அதிகளவில் விரும்பப்படுகின்றன.
இவ்வாறு சங்கர் பேசினார்.
கூட்டத்தில் ரிசர்வ் வங்கி யின் மண்டல இயக்குநர் ஜே.சதகத்துல்லா பேசும் போது, ‘‘தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் வங்கி முகவர் கள் உள்ளனர். கிராமங்கள்தோறும் வங்கிகளின் கிளைகள் திறக் கப்பட்டு வருகிறது. மக்களுக்கு வங்கி தொடர்பான விவரங்களை அளிக்க மாவட்டம்தோறும் நிதி கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வங்கிக் கடன்களை திருப்பி பெறுவதற்கான, சிறப்பு தள்ளுபடி திட்டம் ஒன்றும் தற் போது செயல்படுத்தப்படுகிறது’’ என்றார்.
இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.சவுந்தரராஜன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாண் இயக்குநர் ஆர்.கோட்டீஸ்வரன், குடியரசுத் தலைவரின் முன்னாள் செயலர் பி.முராரி, பிக்கி தலைவர் ரூபன் ஹாப்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறு குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள மாநிலம் என்பதால், மற்றுமொரு நிதி மையத்துக்கான தேவை தற்போது ஏற்பட்டு உள்ளது.