தமிழகம்

காய்கறி லாரிகளுக்கு பச்சை நிற நம்பர் பிளேட்: விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை

செய்திப்பிரிவு

காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு பச்சை நிறத்தில் நம்பர் பிளேட் வேண்டும் என்று விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆர்.வி.கிரி வெளியிட்டுள்ள அறிக்கை:

காய்கறி, பழங்கள் மற்றும் எளிதில் அழுகிப் போகக்கூடிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு பச்சை நிறத்தில் எண் பலகை வேண்டும். அப்போதுதான் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் அதிக நேரம் காத்திருக்காமல் உடனே செல்ல முடியும். இந்த லாரிகளிடமிருந்து வருடத்துக்கு ஒரு முறை குறைந்த கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம். உணவு பொருட்கள் ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்களை இந்தியாவின் வடக்கிலிருந்து தெற்குப் பகுதிக்கும், கிழக்கிலிருந்து மேற்கு பகுதிகளுக்கும் இயக்க வேண்டும்.

விவசாயத்துக்கு நாடாளுமன்றத்தில் தனி பட்ஜெட் அறிவிக்க வேண்டும். 400க்கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள பாசனத் திட்டங்களை விரைந்து முடிக்க தேசிய நீர் ஆணையம் அமைக்க வேண்டும்.

SCROLL FOR NEXT