தமிழகம்

சசிபெருமாள் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சசிபெருமாளின் பிரேதப் பரிசோதனை முடிந்தது.

மூன்று பேர் கொண்ட மருத்துவர் குழு பிரேதப் பரிசோதனை செய்தது. பிரேதப் பரிசோதனையை வீடியோ எடுத்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தால் மட்டுமே அவரது உடலை வாங்குவோம் என்று அவரது உறவினர்கள் கூறினர்.

சசிபெருமாள் போராடியதில் 30 சதவீதத்தையாவது நிறைவேற்றுவதற்கு அரசு முன்வராவிட்டால் சசிபெருமாள் உடலை பெற்றுச்செல்ல முடியாது என்று அவர் மகன் விவேக் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT