தமிழகம்

மது விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

செய்திப்பிரிவு

டாஸ்மாக் கடைகளின் எண் ணிக்கை மற்றும் வியாபார நேரத்தை குறைப்பதோடு, படிப்படி யாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை இடங்கணசாலை மேட்டுக்காட்டில் உள்ள காந்தியவாதி சசிபெரு மாள் வீட்டின் அருகே வாயில் கருப்பு துணி கட்டி 4-வது நாளாக சசிபெருமாளின் குடும்பத்தினர் பூரண மதுவிலக்கை அமல் படுத்த வலியுறுத்தி, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சந்தித்த ஜி.கே.வாசன், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

சசிபெருமாள் பின்பற்றிய அறவழியில் மாணவர்கள் போராட வேண்டும். மதுவின் கொடுமை களை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மதுக்கடைகளை மூட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

டாஸ்மாக் கடைகளின் எண் ணிக்கை மற்றும் வியாபார நேரத் தைக் குறைக்க வேண்டும். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர் களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு நினைத்தால் இதை உடனடியாக செய்ய முடியும்.

பூரண மதுவிலக்குக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காந்தி யவாதி சசிபெருமாள் குறித்து தமிழக அமைச்சர் நத்தம் விஸ்வ நாதன் வெளியிட்ட அறிக்கை ஏற்புடையது இல்லை. அவரது குடும்பத்தினரின் போராட்டத்துக்கு அரசு செவி சாய்க்க வேண்டும். ஒரே நாளில் முடியாவிட்டாலும், படிப்படியாக மதுவிலக்கை அரசு அமல்படுத்த வேண்டும்.

தமிழகம் முழுவதும் நடை பெற்று வரும் போராட்டத்தால் டாஸ்மாக் கடைகளில் இரவு நேரத்தில் ஊழியர்கள் தங்க வேண்டும் என அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவே வாழப்பாடி அருகே டாஸ்மாக் ஊழியர் உயிரிழப்புக்கு காரண மாகும். இவ்வாறு அரசு உத்தரவு பிறப் பித்திருந்தால், அதை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமாகா மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT