களியக்காவிளை சோதனைச்சாவடியில் சிறப்பு எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன் றவர்களுடன் தொடர்பில் இருந்ததாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 11 பேரிடம் போலீஸார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு வெகுமதியை ரூ.7 லட்சமாக உயர்த்தி தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக் காவிளையில் இஞ்சிவிளை செல்லும் அணுகுசாலையில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார்.
வெகுமதி ரூ.7 லட்சம்
குமரி மாவட்டம் திருவிதாங்கோட் டையை சேர்ந்த அப்துல் சமீம்(32), நாகர் கோவில் இளங்கடையைச் சேர்ந்த தவுபிக் (28) ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது.
இருவர் குறித்தும் தகவல் தருவோ ருக்கு கேரள காவல்துறை சார்பில் ரூ.5 லட் சமும், தமிழக காவல்துறை சார்பில் ரூ.4 லட்சமும் வெகுமதி வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக காவல்துறை வெகுமதியை ரூ.7 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக குமரி எஸ்.பி. ஸ்ரீநாத் கூறும்போது, ‘‘அப்துல் சமீம், தவுபிக் குறித்த தகவல் தெரிந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்ட தனிப்பிரிவை 04652 220167 என்ற எண்ணிலும், வாட்ஸ்அப்பில் 70103 63173 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியம் காக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
கொலையாளிகளுடன் தொடர்பில் இருந்ததாக ஏற்கெனவே நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் என 3 பேரிடம் கேரளா வில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் தவுபிக், அப்துல் சமீம் ஆகி யோரின் நண்பர்கள் மற்றும் உறவினர் களான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 11 பேரிடம் தனிப்படை மற்றும் கியூ பிரிவு போலீஸார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் 11 பேரும் கொலையாளி களுடன் அடிக்கடி தொடர்பில் இருந் ததையடுத்து விசாரணை வளையத் துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலையாளிகள் குறித்து பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, விரைவில் இருவரும் பிடிபட வாய்ப்புள்ள தாக காவல்துறை வட்டாரங்கள் தெரி வித்தன.
இதற்கிடையே, அப்துல் சமீமும், தவுபீக்கும் பெங்களூருக்கு தப்பிச் சென்று இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கர்நாடக எல்லைப் பகுதிகளில் கொலையாளிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் குறித்த தகவல்களை போலீஸார் சேகரித்துள்ள னர். இதையடுத்து தமிழக, கேரள மாநில தனிப்படை போலீஸார் நேற்று பெங்களூரு விரைந்தனர்.