கரூர் மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவைச் சேர்ந்த எம்.எஸ்.கண்ணதாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஆகிய 10 ஆயிரத்து 300 உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று (ஜன.11) நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்படி, மறைமுகத் தேர்தல் முழுவதும் ஆடியோ இல்லாத வீடியோவாக பதிவு செய்யவும் மாநிலத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கரூர் மாவட்ட ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக 9 இடங்களிலும், திமுக 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில் 4-வது வார்டு அதிமுக உறுப்பினரான எம்.எஸ்.கண்ணதாசன் மாவட்ட ஊராட்சி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஏற்கெனவே இரு முறை மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது