சென்னையில் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக தவல்களை உடனுக்குடன் பெறுவதற்கு வசதியாக 6 இடங்களில் மின்னணு தகவல் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த தகவல் பலகைகள் இன்னும் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது.
வாகனங்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 86 லட்சத்து 69 ஆயிரத்து 433 வாகனங்கள் இயங்குகின்றன. இதில் சென்னை யில் மட்டும் 41 லட்சத்து 60 ஆயிரத்து 790 வாகனங்கள் ஒடுகின்றன. இதனால் சென்னை போன்ற பெரிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.
மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் சென்னை ஐஐடியில் நகர்ப்புற போக்குவரத்து மேம்பாட்டிற்கான மையம் செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து தொடர்பான பல்வேறு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப பணிகள் இங்கு நடந்துவருகிறது. இங்கு அறிவுசார்ந்த போக்குவரத்து முறை உருவாக்கப்பட்டு 3 பிரிவுகள் கொண்ட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒன்று நிகழ்காலத்தில் போக்குவரத்து தகவல்கள் பெறும் வசதிகள் கொண்டதாகும். இத்திட்டம் மூலம், முக்கியமான சாலைகளில் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு போகுவரத்து நெரிசல் குறித்த விவரங்கள் அதில் தெரியப் படுத்தப்படும். இதற்காக இத்திரைகள் ஜிபிஎஸ்
(வாகன நகர்வு கண்காணிப்பு) தொழில்நுட்பம் மூலம் கணினி மையத்துடன் இணைக்கப்படு கிறது. இந்த திட்டத்துக்காக 100 மாநகர பஸ்களில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தில் சென்னை ஐஐடியின் பேராசிரியர்கள் ஆர்.சிவாநந்தன், கார்த்திக் கே.கிருஷ் ணன், இணை பேராசிரியர் வி.லீலிதா தேவி, உதவி பேராசிரியர் கீதகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.
இது தொடர்பாக டாக்டர் ரா.கீதகிருஷ்ணன், ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
நகர்ப்புற போக்குவரத்து மேம்பாட்டிற்கான மையம் மூலம் போக்குவரத்து துறையில், ஆராய்ச்சிகள் மற்றும் புதிய தொழில்நுட்பம் அமல்படுத்துவது தொடர்பான பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்தின்படி சின்ன மலையில் 2, மத்திய கைலாஸ் சாலையில் 1, எஸ்ஆர்பி டூல்ஸில் 1, விஜயநகரில் 1, திருவான்மியூர் சாலையில் 1 என 6 இடங்களில் 3 மீட்டர் அகலமும், 1 மீட்டர் உயரமும் கொண்ட கணினி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை கணினி மையத்துடன் இணைக்கப்படுகிறது. சுமார் 30 கேமிராக்களும், 15 வயர்லெஸ் ஆண்டனாவும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான பணிகள் முடிந்
துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி அனுமதி பெறப் படவுள்ளது. மேலும், மின்சார இணைப்பு பெற்றவுடன் இன்னும் ஒரு மாதத்தில் இத்திட்டம் மக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த தொழில்நுட்ப முறை நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் தான் செயல்படுத்தப்படுகிறது. இதையடுத்து, முக்கிய நகரங் களுக்கும் இந்த தொழில்நுட்ப முறை விரிவுப்படுத்தப்படும். அடுத்த 6 மாதங்களில் இந்த வசதியை இணையதளம் வழி யாகவும் பெற வழிவகை செய்யப்படும். வீட்டில் இருந்து புறப்படும் முன் இணையதளத்தை பார்த்து பயண நேரத்தை திட்டமிட்டு செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.