தமிழகம்

மதுவிலக்கு கோரி தனி நபர் தீர்மானம்: மு.க.ஸ்டாலின், விஜயதாரணி தகவல்

செய்திப்பிரிவு

மதுவிலக்கு கோரி சட்டப்பேரவை யில் தனி நபர் தீர்மானம் கொண்டு வர பேரவைத் தலைவரிடம் அனு மதி கோரப்பட்டுள்ளதாக திமுக பொருளாளரும் அக்கட்சியின் சட்டப் பேரவை குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று செய்தியாளர் களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘தமிழகத் தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி திமுக சார்பில் தனி நபர் தீர்மானம் கொண்டு வர பேர வைத் தலைவரிடம் கடிதம் கொடுத் துள்ளோம். நாளை (செவ்வாய் கிழமை) இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள் ளோம்’’ என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.விஜயதாரணி (விளவங்கோடு), ‘‘தமிழகத்தில் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்துள்ளன. எனவே, பேரவையின் மற்ற நிகழ்ச்சிகளை ஒத்திவைத்து விட்டு மதுவிலக்கு குறித்து விவாதிக்க வலியுறுத்துவோம். மது விலக்கை அமல்படுத்த வலி யுறுத்தி காங்கிரஸ் சார்பில் தனிநபர் மசோதா கொண்டு வர பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத் துள்ளோம். விலைவாசி உயர்வு, குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளையும் பேரவையில் எழுப்புவோம்’’ என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் சட்டபேரவை குழுத் தலைவர் எம்.ஆறுமுகம் (வால்பாறை), ‘‘மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என தமி ழகம் முழுவதும் மக்கள் தன் னெழுச்சியாக போராடி வருகின்ற னர். எனவே, மக்களின் உணர்வு களுக்கு மதிப்பளிக்கும் வகையில் மதுவிலக்கு குறித்து தனி தீர்மானம் கொண்டு வர வலியுறுத்துவோம். விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக் கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை பேரவையில் எழுப்புவோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT