மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த வகை செய்யும் சட்டம் உட்பட 15 சட்ட மசோதாக்கள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன.
கூட்டுறவு சங்கத் தலைவர்களை இடைநீக்கம் செய்தல், ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம், தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் சந்தைக்குழுவின் தனி அலுவலர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு ஆகிய 3 சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து, 2019 ஜூன் 21-ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிவு செய்த பரிந்துரைகளை செயல்பாட்டுக்கு கொண்டுவர வகை செய்யும் 2017 தமிழ்நாடு ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழகத் துடன் இணைக்கப்பட்ட 12 தனியார் கல்லூரிகளுக்கு அரசின் அனுமதி வழங்கும் 2013 தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் நிதி பயன்பாட்டை கண்காணிக்கும் அதிகாரத்தை அரசிடம் வழங்க 1989 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம், மிகவும் பழமையான, தற் போது வழக்கத்தில் இல்லாத சட்டங் களை நீக்குதல், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் பதவிக்கான தகுதிகளை மாற்றி அமைக்க 1996 தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம், சொத்து உரிமையாளர்கள் - வாடகை தாரர்கள் இடையேயான வாடகை ஒப்பந்த கால அளவை 365 நாட் களாக நீட்டிக்க 2017 தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள், பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டத் தில் திருத்தம் ஆகிய மசோதாக்கள் சட்டப்பேரவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன.
தமிழகத்தில் உள்ள 3-ம் நிலை நகராட்சிகள் 2-ம் நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டும், மாநகராட்சி களோடு இணைக்கப்பட்டும் விட்டன.
தற்போது தமிழகத்தில் 3-ம் நிலை நகராட்சிகள் இல்லாத நிலையில் அதற் கான சட்டத் திருத்தம், மாநகராட்சி களின் மேயர், நகராட்சிகள், பேரூராட்சி களின் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த 2019 நவம்பர் 19-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்துக்கு மாற்றாக சட்டத் திருத்தம், உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்களின் பதவிக் காலம் 2019 டிசம்பர் 31-ம் தேதியோடு முடிய இருந்த நிலையில் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங் களுக்கு அல்லது தேர்தல் நடைபெற்று மன்றத்தின் முதல் கூட்டம் நடைபெறும் வரை இதில் எது முதலில் நடை பெறுகிறதோ அதுவரை நீட்டிக்க 2019 நவம்பர் 19-ம் தேதி ஆளுநர் அவசரச் சட்டம் பிறப்பித்தார்.
அதற்கு மாற்றாக சட்டத் திருத்தம், உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தவும், ஊராட்சி ஒன்றிய, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக இருப்பவர், தலைவராக தேர்வு செய்யப் பட்டால் துணைத் தலைவர் பதவியைத் துறக்க சட்டத்தில் வழிவகை செய்ய வும் தேர்தல் ஆணையத்தின் பரிந் துரைக்கேற்ப சட்டத் திருத்தம், 2020-ம் ஆண்டு தமிழ்நாடு நிதி ஒதுக்கச் சட்டம் என 12 சட்ட மசோதாக்கள் சட்டப் பேரவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன. இரு நாட்களில் அறிமுகம் செய்யப்பட்ட 15 சட்ட மசோதாக்களும் பேரவையில் நேற்று பிற்பகல் நிறைவேற்றப்பட்டன.
இதில், நிதி ஒதுக்கச் சட்டம், வாடகை ஒப்பந்தச் சட்டம் தவிர மற்ற 12 சட்ட மசோதாக்கள் திமுக, காங்கிரஸ், முஸ் லிம் லீக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டன.