தமிழக பாரம்பரிய உடை அணிந்து பழநி மலைக்கோயிலுக்கு சுவாமிதரிசனம் செய்ய வந்த அமெரிக்கர்கள். 
தமிழகம்

இந்து மதம் பற்றிய ஆய்வுக்காக பழநிக்கு தமிழக பாரம்பரிய உடை அணிந்து வந்த வெளிநாட்டு ஆராய்ச்சி மாணவர்கள்

பி.டி.ரவிச்சந்திரன்

பழநி தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலுக்கு வந்த அமெரிக்காவை சேர்ந்த 30 க்கும் மேற்பட்டோர் தமிழக பாரம்பரிய உடை அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியிலுள்ள தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலுக்கு, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளை சேர்ந்த 30 க்கும் மேற்பட்டோர் இந்து மதம் குறித்து ஆய்வுமேற்கொள்ள வந்தனர்.

இவர்கள் தமிழக பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை அணிந்து வந்தது கோயிலுக்கு வந்த பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இவர்களை அழைத்தவந்த இந்திய சுற்றுலாவளர்ச்சி கழக அதிகாரி ஜெகநாத்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்காவை சேர்ந்த இந்து சமய பேராசிரியர் டாக்டர் டக்ளஸ் ப்ரூக்ஸ். இவரிடம் இந்துமதம் பற்றி அமெரிக்காவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.

அவர்களில் ஒரு பகுதியினர் இந்து சமயம் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் தமிழகத்திற்கு ஆண்டுதோறும் வருகின்றனர். குறிப்பாக சைவசித்தாந்தம் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் ஆருத்ராதரிசனம் நடைபெறும் காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில், கும்பகோணம் பகுதியில் உள்ள சிவஆலயங்கள், பழநி, ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய திருத்தலங்களுக்கு சென்று சைவசித்தாந்தங்கள் குறித்து அறிந்துகொள்கின்றனர்.

15 நாட்கள் சுற்றுலாவரும் அமெரிக்கர்கள் அனைவரும் ஆன்மீக தலங்களுக்கு மட்டுமே செல்வது குறிப்பிடத்தக்கது, என்றார்.

SCROLL FOR NEXT