குப்பை சேகரிப்புக்காக வீடுகளுக்கு வரும் துப்புரவு பணியாளர்களிடம் குப்பையை தரம் பிரித்து வழங்கும் பொதுமக்களுக்கு, பரிசுப் பொருட்கள் வழங்கி ஊக்கப்படுத்தி வரும் நகராட்சி ஆணையர், குப்பை தொட்டியில்லா நகரமாக மாற்றுவதற்கான முயற் சியாக இப்பணிகளை மேற்கொண் டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் பெருநகராட்சியில் 51 வார்டுகளில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற னர். மேலும், ஏராளமான வணிக நிறுவனங்களும் உள்ளன. நகரில் நாள் ஒன்றுக்கு 65 டன் குப்பை சேகரமாகிறது. இதில், 15 டன் பிளாஸ்டிக் கழிவாக உள்ளன. இந்த குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவை சேகரித்து கொட்டுவதற்காக, திருக்காலிமேடு பகுதியில் நத்தப் பேட்டை ஏரிக்கரையில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இங்கு, திடக்கழிவு மேலாண்மை திட்டத் தின்கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பிளாஸ்டிக் கழிவை சிமென்ட் தொழிற்சாலைகளில் எரிபொருளாக பயன்படுத்துவதற் காக, நகராட்சி நிர்வாகம் டன் கணக்கில் அனுப்பி வருகிறது. எனி னும், நத்தப்பேட்டை ஏரிக்கரையில் பல ஆண்டுகளாக பிளாஸ்டிக் கழிவுடன் கூடிய குப்பை தேக்க மடைந்துள்ளன. இந்நிலையில், காஞ்சியில் குப்பை தொட்டி வைத்து குப்பை சேகரிக்கப்பட்டு மேற்கண்ட குப்பை கிடங்குக்கு துப்புரவு பணி யாளர்களால் எடுத்து செல்லப் படுகிறது.
இந்நிலையில், காஞ்சி நகரை குப்பை தொட்டியில்லா நகரமாக்கு வதற்கான முயற்சிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதற்காக, நகரில் வசிக்கும் மக்கள் வீடுகளிலேயே குப்பையை தரம் பிரித்து வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. இதில், குப்பை தரம் பிரித்து வழங்கும் பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி நகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஊக்கப் படுத்தி வருகிறார். இதனால், நகர மக்களிடம் இத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் நகர் நல அலுவலர் முத்து கூறியதாவது:
பொதுமக்கள் வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும். மேலும் காஞ்சியை குப்பை தொட்டியில்லா நகரமாக்கு வதை நோக்கமாக கொண்டு நகராட்சி ஆணையர் இப்பணிகளை செயல்படுத்தி வருகிறார். இதை ஊக்கப்படுத்தும் வகையில் குப்பையை தரம் பிரித்து வழங்கும் பெண்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக வழங்கி வருகிறார். இதனால், குடும்ப பெண் கள் மத்தியில் இத்திட்டத்துக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
நகரில் படிப்படியாக இத்திட் டத்தை செயல்படுத்தி வருகிறோம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக, இத்திட்டத்தின் மூலம் தூய்மை யடைந்த பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு மற்றும் கோலப் போட்டிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். குடும்பத் தலைவியாக விளங்கும் பெண் களை ஊக்கப்படுத்துவதன் மூலம், கோயில் நகரமான காஞ்சி குப்பை தொட்டியில்லா நகரமாக மாற்றம் பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.