தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில்  21 வயதுக்கு குறைவான வீரர்களுக்கு அனுமதியில்லை: மதுரை ஆட்சியர்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 21 வயதுக்கு குறைவானோர் மாடுகளை பிடிக்க அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடக்கும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

பாரம்பரியமாக நடக்கும் இந்தப் போட்டி களில் பங்கேற்பதை காளை வளர்ப் போரும், மாடுபிடி வீரர்களும் கவுரவமாகப் பார்ப்பார்கள். இந்தப் போட்டிகள் நெருங்கிவிட்டதால் அதற்கான ஏற்பாடு களை மாவட்ட நிர்வாகமும், கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டில்களில் கலந்து கொள்ளும் காளைகளுக்கான உடற் தகுதிச் சான்று வழங்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்ள தகுதியான வகையில் உயரம் மற்றும் உடல்திறன் உள்ளதா என்பதைப் பரி சோதனை செய்த பின்னரே கால்நடை மருத்துவர்கள் இந்தத் தகுதிச் சான்றிதழ் களை வழங்கி வருகின்றனர்.

வீரர்களுக்கு உடற்தகுதி பரிசோதனை..

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்போர் 21 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஜனவரி 17-ல் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்களுக்கு நாளை உடற்தகுதி பரிசோதனை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 21 வயதுக்கு குறைவானோர் மாடுகளை பிடிக்க அனுமதியில்லை என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT