தொழிற்சாலைகளில் விபத்து ஏற்படாத மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும் என்று அரசு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் கே.மனோகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தமிழக பிரிவு சார்பில், ‘வேலை செய்யுமிடத்தில் பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழல்’ என்ற தலைப்பில் நிறுவனங்கள், தொழிலாளர்கள், தொழிலாளர் களின் குழந்தைகள் பங்கேற்ற கட்டுரை, கோலம், சிறந்த வாசகம் உருவாக்குவது உள்ளிட்ட பல் வேறு போட்டிகள் நடைபெற்றன.
இப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் கவுன்சிலின் தமிழகப் பிரிவு தலைவரும், தமிழக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநருமான கே.மனோகரன் பங்கேற்று, விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:
தொழில் பாதுகாப்பு கவுன்சிலின் சென்னை பிரிவு, இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் தொழிலகப் பாதுகாப்பு தொடர்பாக 6 கருத்தரங்குகளை நடத்தியுள்ளது.
3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு, தொழிலக பாதுகாப்பு தொடர்பான பயிற்சியையும் வழங்கியுள்ளது. தொழிற்சாலைகளில் விபத்து ஏற்படாத மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும். அதற்கு தொழில் நிறுவனங்கள் ஒத் துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்விழாவில் கவுன்சிலின் செயலர் பழனிவேலு ராஜ்மோகன், பொருளாளர் கே.ஜெகநாதன், துணைத் தலைவர்கள் கே.பாஸ்கரன், பார்த்திபன், இணை செயலாளர் ஜி.சுபாஷ், தொழி லதிபர்கள் ஈஸ்வர ராவ் நந்தம், கவிதாசன் மற்றும் தொழிலக பாதுகாப்பு துறை இணை இயக்குநர் எம்.வி.கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.