தமிழகம்

பதிவுத்துறை, வணிகவரித் துறை அலுவலகங்களுக்கு ரூ.60 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்

செய்திப்பிரிவு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களில் பதிவுத்துறை மற்றும் வணிகவரித் துறை சார்பில் ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பதிவு ஆவணங்களை பராமரிக் கவும், ஊழியர்கள் பணியாற்றவும் போதிய இடவசதி இல்லாததால், வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகங் களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. அந்த வகையில், பதிவுத் துறையின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 9,768 சதுரடி பரப்பில் ரூ.1.32 கோடியில் கட்டப்பட்ட பதிவாளர் அலுவலக கட்டிடத்தை முதல்வர் ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

மேலும் விழுப்புரம், ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், வேலூர், தஞ்சை, காஞ்சிபுரம், நாமக்கல், தருமபுரி, ராமநாதபுரம், அரியலூர் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 13 ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகங்கள் மற்றும் கடலூர், கோவை, ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி, நெல்லை, கரூர், விருதுநகர், தேனி, சிவகங்கை, பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 56 இடங்களில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலக கட்டிடங் களையும் முதல்வர் திறந்துவைத் தார். இக்கட்டிடங்களின் மொத்த மதிப்பு ரூ.48.20 கோடி.

வணிகவரி கட்டிடங்கள்

வேலூர், புதுக்கோட்டை, திருப் பூர் மாவட்டங்களில் கூடுதல் வணிக வரி அலுவலகங்கள், விழுப்புரம், நெல்லை, தருமபுரி, தூத்துக்குடி யில் வணிகவரி அலுவலகங்கள், நாகை, விழுப்புரம், கோவையில் கட்டப்பட்டுள்ள வணிகவரி தணிக்கை சாவடிகள் என மொத் தம் ரூ.11 கோடியே 79 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான புதிய கட்டிடங்களையும் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், வணிகவரித்துறை ஆணையர் க.ராஜாராமன், பதிவுத்துறை தலை வர் சு.முருகய்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT