மாவட்டங்களில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள், முக்கிய விழாக்களில் புகைப்பட கண்காட்சியை அதிக அளவில் நடத்த வேண்டும் என்று உதவி மக்கள் தொடர்பு அலுவலர் களுக்கு செய்தித்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறி வுரை வழங்கினார்.
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை எம்ஜிஆர் திரைப்பட பயிற்சி நிறுவன அரங்கில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், அமைச்சர் ராஜேந் திர பாலாஜி பேசியதாவது:
அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் விளம் பரப் பணிகளை மக்கள் தொடர்பு அலுவலருடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். மாவட்டங் களில் நடக்கும் முக்கிய விழாக் கள், அரசு நிகழ்ச்சிகளில் புகைப் பட கண்காட்சிகளை அதிக அளவில் நடத்த வேண்டும். அரசின் சாதனைகளை விளக்கும் வீடியோ படக்காட்சிகளை கிராமங்களில் மக்களுக்கு தொய்வின்றி காட்ட வேண்டும்.
உதவி மக்கள் தொடர்பு அலு வலர்கள், செய்தியாளர்களுடன் நல் லுறவை பேணிப் பாதுகாக்க வேண் டும். செய்திகள் உடனுக்குடன் வரும் வகையில், செய்தி வெளியீடுகளை தயாரித்து வெளியிட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் செய்தித்துறை செயலாளர் மூ.ராசாராம், இயக்குநர் ஜெ.குமர குருபரன், கூடுதல் இயக்குநர் எஸ்.பி.எழிலழகன், இணை இயக்குநர் தானப்பா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.