தமிழகம்

தனித்து போட்டியிட்டிருந்தால் பாஜக அதிக இடம் பிடித்திருக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

செய்திப்பிரிவு

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டிருந்தால் பாஜக அதிக இடங்களை பிடித்திருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இது தொடர்பாக, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்ய அனைவரிடமும் கருத்து கேட்கப்படுகிறது. அதன் அடிப்படையில் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார். தமிழகத்தில் பாஜக காலம் தொடங்கி விட்டது. அதற்கு உதாரணமாகத் தான் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் கணிசமான வெற்றியை தந்து பாஜகவுக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள்.

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பமாக இருந்தது. அப்படி போட்டியிட்டிருந்தால் அதிகமான இடத்தை பிடித்திருப்போம். காரணம், அதிகமான இடங்களில் போட்டியிட்டிருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT