தமிழகத்தில் நாளை நடக்கவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு சிஐடியு மற்றும் ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை அழைப்பு விடுத்துள்ளன. இந்தப் போராட்டத்துக்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. முழு அடைப்பு போராட்டம் நடந்தாலும் வாகன போக்குவரத்துக்கு இடையூறு செய்ய மாட்டோம் என மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், முழு அடைப்பு போராட்டத்துக்கு ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சேஷசயனம் கூறும்போது, ‘‘மதுவால் தமிழகத்தில் லட்சக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆட்டோவுக்காக வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தற்கொலைக்கு முயல்கின்றனர். எனவே, தமிழகத்தில் மதுவிலக்கு கோரி வரும் 4-ம் தேதி நடக்கவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், அதில் பங்கேற்க உள்ளோம். எங்கள் சங்கத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்பர்’’ என்றார்.
ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் சங்கத்தின் (சிஐடியு) தென் சென்னை மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, ‘‘ஆட்டோ தொழிலாளர்கள் தங்க ளின் வருமானத்தில் பெரும் பகுதியை மதுவுக்கு செலவிடுகின்ற னர். இதனால், அவர்களின் குடும் பத்தில் உள்ள பெண்கள், குழந்தை கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, முழு அடைப்பு போராட் டத்துக்கு ஆதரவு தெரிவித்துள் ளோம். மேலும், போராட்டத்திலும் பங்கேற்போம்’’ என்றார்.