பாமக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது.
பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்ட செயலர்கள், மற்றும் துணை அமைப்புகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் இன்று நடைபெற்றது. பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாமக. நிறுவனர் ராமதாஸ் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.
பாமக அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் பேராசிரியர் தீரன், பாமக பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா, இணைப்பொதுச்செயலாளர்கள் இசக்கிப் படையாட்சி, ஏ.கே. மூர்த்தி, புதுவை மாநில அமைப்பாளர் பேராசிரியர் தன்ராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரை உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பாமக துணை அமைப்புகளில் பாட்டாளி இளைஞர் சங்கம், பாட்டாளி மகளிர் சங்கம், பாட்டாளி இளம்பெண்கள் சங்கம், பாட்டாளி மாணவர் சங்கம் ஆகியவற்றின் மாநில செயலாளர்கள், மாநில துணை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.