தமிழகம்

சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டும் பணி: திமுக மீது சரத்குமார் புகார்

செய்திப்பிரிவு

சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகள் தாமதமானதற்கு திமுகதான் காரணம் என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும் சமக தலைவருமான சரத்குமார் கூறினார்.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சரத்குமார், பின்னர் பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் கூறியதாவது:

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக முதல்வர் ஜெயலலிதா தனது முந்தைய ஆட்சியில் 2002-ம் ஆண்டு நிலம் வழங்கினார். மேலும் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரமும் வழங்கப்பட்டது. சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகள் தாமதமானதற்கு நடிகர் சங்கம்தான் காரணம் என்று சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.

சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த அவர் கள், மணிமண்டபம் அமைக்கும் பணியை மேற்கொள்ளவில்லை. அதனால்தான் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், சிவாஜிக்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் தற்போது தானாக அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்க தாகும். இவ்வாறு சரத்குமார் கூறினார்.

SCROLL FOR NEXT