ராம்ராஜ் நிறுவனத்தின் ‘வேட்டி வாரம்’ கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஒட்டிக்கோ கட்டிக்கோ அட்ஜஸ்டபிள் ஒட்டும் வேட்டி மற்றும் அதன் பார்டருக்கு மேட்ச்சான கலர்சட்டைகள் சலுகை விலை ரூ.1,000-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ராம்ராஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
வேட்டியை தனித்துவம் மிக்க உடையாக்கி, அதன் விற்பனையை மேம்படுத்தி வருபவர் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன். குழந்தைகள் முதல் 16 வயது சிறுவர்கள் வரை அணியும் வகையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ‘லிட்டில் ஸ்டார்’ வேட்டி சர்ட்டுகள் பெரும் வரவேற்பை பெற்றன. அடுத்த ஆண்டில், இளைஞர்கள் நம் பாரம்பரிய தேசிய உடையை எளிதாக அணிய ஜெனக்ஸ்ட் ‘ஒட்டிக்கோ கட்டிக்கோ’ என்ற ஒட்டும் வேட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இதற்கிடையில், ராம்ராஜ் நிறுவனம் ஆண்டுதோறும் ஜனவரி 1 முதல் 7-ம் தேதி வரை ‘வேட்டி வாரம்’ கொண்டாடி வருகிறது. இதையொட்டி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வேட்டி பார்டர் - அதற்கு மேட்ச் சட்டைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
இதுவரை ஜெனக்ஸ்ட் ஒட்டிக்கோ கட்டிக்கோ ஒட்டும் வேட்டிகள், ஒவ்வொருவரின் அளவை கணக்கில் கொண்டு, வாங்கி உடுத்தும்படி இருந்தது. மேலும் பல ஆராய்ச்சிகள் செய்து, முற்றிலும் எளிமையாக தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.
எந்த அளவு உள்ளவர்களும் அதன் உட்பகுதியில் தேவைக்கு ஏற்ப ஒட்டி, உடுத்தும்படி தற்போது அறிமுகமாகியுள்ளது. ராம்ராஜ் ஒட்டிக்கோ கட்டிக்கோ அட்ஜஸ்டபிள் ஒட்டும் வேட்டி மற்றும் அதன் பார்டருக்கு மேட்ச்சான கலர் சர்ட்கள் சிறந்த தரத்துடன், அனைவரும் விரும்பும் வகையில் சலுகை விலை ரூ.1,000-க்கு ‘வேட்டி வாரம் - 2020’ விழாவை முன்னிட்டு பொங்கல் பரிசாகவும் கிடைக்கிறது.