மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சி யில் ராஜபக்சே கலந்து கொள்வது, தமிழக சட்ட மன்றத்தில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை அவமதிப்பதாக உள்ளது என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: புதிதாக அமையவிருக்கும் அரசின் அதிகாரபூர்வமான முதல் நாள் நிகழ்விலேயே தமிழர் களின் உணர்வுகளை உதாசினப் படுத்தும் விதமாக ராஜபக்சேவை அழைத்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி யாக 37 உறுப்பினர்களை கொண் டிருக்கும் தமிழக முதலமைச்சர் இதற்கு தன் எதிர்ப்பையும், கடும் கண்டனத்தையும் தெரிவித் திருக்கிறார். அதேபோல் தமிழகத் தின் மற்ற தலைவர் களும் கட்சி வேறுபாடு இன்றி இதற்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இத்தனை எதிர்ப்புகளையும் மீறி ராஜபக்சே இந்நிகழ்வில் கலந்துகொள்வது தமிழக சட்ட மன்றத்தில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை அவமதிக்கும் செயலாக உள்ளது. ஆகவே, எட்டு கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ராஜபக் சேயின் வருகையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு பாரதி ராஜாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இயக்குநர் வ.கவுதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையை ஏன் என்று தட்டிக் கேட்பதற்குரிய அதிகாரத்தில் அமரப்போகும் நீங்கள் தமிழ்மக்க ளின் மனங்களை புண்படுத்தும் இந்த நடவடிக் கையை கைவிட வேண்டும். இன அழிப்புக்கு ஆளாகி நிற்கும் தமிழர்களின் பக்கமும், தர்மத்தின் பக்கமும் ஆதரவாக நிற்க வேண்டும்’’ என்று மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.