தமிழகம்

இலவச பொருட்களை இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்க அமைச்சர்கள் உத்தரவு

செய்திப்பிரிவு

இந்தாண்டுக்கான 45 லட்சம் இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்களை ஆண்டு இறுதிக் குள் வழங்கி முடிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு அமைச் சர்கள் உத்தரவிட்டனர்.

2011-ம் ஆண்டுமுதல் இது வரை, ரூ.8667 கோடி நிதி ஒதுக்கப் பட்டு 1.35 கோடி மகளிருக்கு இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று இப் பொருட்கள் வழங்கப்படுவது தொடர்பாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மாவட்ட வாரியாக ஆய்வு செய்தனர்.

அப்போது, மாவட்டங்களில் பெறப்படும் இலவச பொருட்களை உரிய சோதனைக்குப் பின்தான் பய னாளிகளுக்கு வழங்க வேண்டும். பயனாளிகளுக்கு வழங்கு வதில் கால தாமதம் செய்யக் கூடாது.

பொருட்கள் வைக்கப்படும் கிடங்குகள், சேவை மையங்களின் செயல்பாடுகளை மாவட்ட, மாநில அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். இந்தாண்டு வழங்கப்படும் 45 லட்சம் இலவச பொருட்களின் முழு இலக்கையும் ஆண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT