கிருஷ்ணகிரி வங்கிக் கொள்ளை தொடர்பாக கைதான 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அருகே குந்தாரப் பள்ளி ராமாபுரம் பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளையில் கடந்த ஜனவரி 23-ம் தேதி நள்ளிர வில் புகுந்த மர்ம கும்பல் 12 கோடி மதிப்புள்ள 6,038 பவுன் தங்க நகைகளை கொள்ளைய டித்துச் சென்றனர். இவ்வழக் கில் தொடர்புடைய வடமாநில கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட் டது.
இதில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷாநவாஸ் என்பவரை, கர்நாடக மாநிலத்தில் தனிப்படை போலீஸார் கைது செய்த னர். கடந்த மே மாதம் பாதாயுள் மாவட்டம் கம்ராயலம் கிராமத் தைச் சேர்ந்த அப்ரர், ஷேக் அலிகான் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் டிஎஸ்பி சந்தான பாண்டியன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், சங்கர் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீஸார், டெல்லி யில் கடந்த 14-ம் தேதி சாதிக் அலிகான், ஃபஹீம், யூசூப், அஸார் அலி ஆகிய 4 பேரை கைது செய்து, கிருஷ் ணகிரிக்கு அழைத்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு கிருஷ் ணகிரி ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
சொகுசு வாழ்க்கை
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்ட கொள்ளையர்கள் அதனை வைத்து சொகுசு வாழ்க்கை நடத்தி வந்ததாக தனிப்படை போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி கண்ணம்மாள் கூறும்போது, கடந்த 6 மாதங்களாக தனிப்படை போலீஸார் வடமாநிலங்களில் முகாமிட்டு நடத்திய தேடுதல் வேட்டையில் மே மாதம் 3 பேர் கைது செய்யப்பட்டு ரூ.35 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது டெல்லியில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 4 பேரை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர் என்றார். பின்னர் தனிப்படை போலீஸாரை எஸ்பி பாராட்டி வெகுமதி வழங்கினார்.