உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினருக்கு சவாலாக இருந்த அமமுக தென் மாவட்டங்களில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளை கைப்பற்றியுள்ளது. 2 இடங்களில் ஒன்றியத் தலைவர் பதவியை அமமுக பெறவுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஓரணியாகவும், திமுக தலைமையில் மதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியாகவும் போட்டியிட்டன. அதே நேரம் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தின கரன் தனித்து களம் காண்பதாக அறிவித்தார்.தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட் டபோதிலும், இக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. எனினும், மாநிலம் முழுவதும் பல்வேறு பதவிகளுக்கு தனித்துப் போட்டியிட்டனர்.
இதில் 90-க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் அமமுக வெற்றி பெற்றுள்ளது. இதில் பெருமளவில் தென்மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் வகையில் அமமுகவினர் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து அமமுக மாநில நிர்வாகிகள் கூறியதாவது:
இந்த தேர்தலில் 18 மாவட்டங்களில் 90-க்கும் மேற்பட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவி களை கைப்பற்றியுள்ளோம். குறிப்பாக தென் மாவட்டங்களில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 8, மதுரை மாவட்டத்தில் 7, தேனியில் 5, விருதுநகரில் 3, திண்டுக்கல்லில் 2, சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி ஒன் றியத்தில் 8, தூத்துக்குடி மாவட்டம், கயத் தாறு ஒன்றியத்தில் 10 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியுள்ளோம். இதன் மூலம் கண்ணங்குடி, கயத்தாறில் ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் தேர்வாகவுள்ளனர்.
மேலும், மாநிலம் முழுவதும் எங்களது கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர் பதவி களில் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோன்று நகர்ப்புற உள்ளாட்சி (பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி) தேர்தலிலும் அதிக இடங்களை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தென் மாவட்டங்களில் பல இடங்களில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட அதிமு கவினருக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி சவாலாக இருந்தோம். எங்களால் பல இடங்களில் வெற்றி வாய்ப்பை அதிமுகவினர் இழந்துள்ளனர் என்று கூறினர்.