நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் காங்கி ரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக ளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது பாரதிய ஜனதா கட்சி. 2 மாவட் டங்களிலும் போட்டியிட்ட 36 வார் டுகளில் 15 வார்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
நாகை மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 214 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்களுக் கான தேர்தலில் அதிமுக 167 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சி களான பாட்டாளி மக்கள் கட்சி 10 இடங்களிலும், தேமுதிக 22 இடங் களிலும், பாரதிய ஜனதா கட்சி 16 இடங்களிலும் போட்டியிட்டன. திமுக 191 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 11, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 5 இடங்களிலும், மதிமுக |2 இடங்களிலும் போட்டியிட்டன. அமமுக 193 இடங்களிலும் போட்டி யிட்டது.
இதில் திமுக 108 இடங்களிலும், அதிமுக 70 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தேமுதிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தி லும், பாரதிய ஜனதா கட்சி 8 இடங் களிலும், பாட்டாளி மக்கள் கட்சி 3 இடங்களிலும், அமமுக 2 இடங் களிலும் வெற்றி பெற்றுள்ளன. 18 இடங்களில் சுயேச்சை வேட்பாளர் கள் வெற்றி பெற்றுள்ளனர்.
16-ல் 8 இடங்களில் வெற்றி
இதில், 16 இடங்களில் போட்டி யிட்ட பாரதிய ஜனதா கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க வெற்றியாகப் பார்க் கப்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி களை பின்னுக்குத் தள்ளி அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள் ளது அக்கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதில், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்று, தக்க வைத்துவந்த இடங்களை தற்போது பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வேதாரண்யம் ஒன்றியத்தில் இருந்து மருதூர் (வடக்கு)- ராஜ்கு மார், செங்கராயநல்லூர்- உஷா ராணி, தேத்தாக்குடி (தெற்கு)- செல்லமுத்து, தேத்தாக்குடி (வடக்கு)- சாந்தி ஆகியோர் ஒன்றியக் குழு உறுப்பினர்களாக முதல் முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளனர்.
வேதாரண்யம் தொகுதி எம்எல்ஏ வாக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.கே.வேதரத்தினம் திமுகவில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவர் இந்த தேர்தலில் முக்கிய பங்காற்றியதாக கட்சியினர் தெரிவித்தனர்.
பாஜகவில் எழுச்சி
பாஜக பெற்றுள்ள வெற்றி குறித்து வேதாரண்யம் அடுத்த மரு தூர் (வடக்கு) வார்டில் வெற்றி பெற்றுள்ள ராஜ்குமார் கூறியதா வது:
நான் 8-ம் வகுப்புதான் படித்துள்ளேன். விவசாயம் செய்து வருகிறேன். நான் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பிரதமர் மோடியால் பாரதிய ஜனதா கட்சியில் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதன் அடையாளம்தான் என் வெற்றி. மேலும் மாற்று வேட்பாளர் மீது வாக்காளர்களுக்கு உள்ள அதிருப்தியும் என் வெற்றிக்கு காரணம். முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.வேதரத்தினம் என்னுடன் வாக்கு சேகரித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
தஞ்சையில் 7-ல் வெற்றி
இதேபோல தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.