அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் தொலைதூர ஏசி பேருந்துகளில் இணைய தளம் மூலம் டிக்கெட் முன் பதிவு செய்யும் வசதி தொடங் கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஆர்.முத்துகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசு போக்குவரத்துக் கழகத் தின் சார்பில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப் பேட்டை, திருப்பதூர், விழுப் புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணா மலை, திருவள்ளூர் மாவட்டங் களுக்கும், புதுச்சேரி, திருப்பதி, காளாஸ்திரி, பெங்களூரு, நெல் லூர் பகுதிகளுக்கும், தினமும் 3,166 பேருந்துகள் 16 லட்சம் கிமீ தூரத்துக்கு இயக்கப்படு கின்றன.
இவற்றின் மூலம் தினமும் 16 லட்சத்து 50 ஆயிரம் பயணிகளின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. குறிப்பாக, நகர்புறம் மற்றும் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் முதன்முறையாக குறைந்த கட் டண குளிர்சாதனப் பேருந்துகள் வசதியை முதல்கட்டமாக 52 பேருந்துகளின் வசதியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்த பேருந்து வசதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வசதியை மேலும் விரிவுப்படுத்தும் வகை யில், கூடுதலாக 193 வழித் தடங்கள் என மொத்தம் 266 வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பேருந்துகளுக்கு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையங்களில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்து வரும் நிலையில், இனி www.tnstc.in, www.busindia.com, www.paytm.com, www.makemytrip.com, www.redbus.com, www.goibibo.com ஆகிய இணையதளங்கள் மூலம் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஆர்.முத்துகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.