தங்கத்தின் தேவை அதிகரிப்பு, அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் போன்ற கார ணங்களால் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.632 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.30,520-க்கு விற்கப்பட்டது.
சர்வதேச அளவில் பொரு ளாதாரத்தில் மாற்றம், பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட கார ணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. உலக அளவில் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் முக்கிய பங்கு வகிக் கின்றன. இந்த இரு நாடு களில் ஏற்படும் சாதக, பாதக சூழல்கள், பொருளாதார நெருக்கடி போன்றவையே உலக அளவில் தங்கம் விலையை நிர்ணயிக்கின்றன.
இதற்கிடையே, அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதனால், பங்குச் சந்தை, தொழில் துறை போன்றவற்றை தவிர்த்துவிட்டு, தங்கத்தில் முதலீட்டாளர்கள் நேற்று அதிக அளவில் முதலீடு செய்தனர்.
மற்றொருபுறம் உலக அளவிலும், உள்ளூரிலும் தங் கத்தின் தேவையும் அதிகரித் துள்ளதால், தங்கம் விலையில் நேற்று திடீர் உயர்வு காணப் பட்டது.
சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3,736-க்கும், ஒரு பவுன் ரூ.29,888-க்கும் விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.79 என பவுனுக்கு ரூ.632 உயர்ந்தது. இதனால் நேற்று ஒரு கிராம் ரூ.3,815-க்கும், ஒரு பவுன் ரூ.30,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது
கூட்டம் குறைந்தது
கடந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.30 ஆயி ரத்தைத் தாண்டி உச்சம் தொட்டது. அதன் பிறகு, தங்கம் விலையில் சொற்ப அளவிலேயே ஏற்ற, இறக்கம் நிலவியது. இந்த நிலையில், திடீரென ஒரே நாளில் பவுனுக்கு ரூ.632 உயர்ந்து, மீண்டும் ரூ.30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதனால், தமிழகத்தில் பெரும்பாலான நகைக் கடை களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. குறிப்பாக, சென்னையில் தி.நகர், புரசை வாக்கம், தாம்பரம், மயி லாப்பூர் உள்ளிட்ட இடங் களில் இருக்கும் நகைக் கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் குறைந்து, சுமார் 25 சதவீதம் வரை விற்பனை குறைந்திருப்பதாக வியாபாரி கள் தெரிவித்துள்ளனர்.