சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர்களான கணவன், மனைவி வெற்றி பெற்றுள்ளனர்.
மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. இதில், 10 வார்டுகளில் திமுக, அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் நேரடியாக களம் கண்டனர்.
இதில் 5-வது ஊராட்சி ஒன்றிய வார்டில் திமுக வேட்பாளர் மா.அண்ணாத்துரையை எதிர்த்து அதிமுக வேட்பாளர் அங்கயற்கண்ணி நடராஜன் போட்டியிட்டார்.
அண்ணாதுரையின் மனைவி லதா, 6-வது வார்டில் அதிமுக வேட்பாளர் பாலமுருகனை எதிர்த்து போட்டியிட்டார்.
இதில் 520 வாக்குகள் வித்தி யாசத்தில் மா.அண்ணாத்துரையும், அவரது மனைவி லதா 504 வாக் குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.
83 வயது மூதாட்டி வெற்றி:
சிவகங்கை அருகே காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ளது பாகனேரி ஊராட்சி.இந்த ஊராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் ராஜமார்த்தாண்டம் மனைவி பார்வதி (83) அவரை எதிர்த்து சாந்தி (49) போட்டியிட்டனர். இதில் பார்வதி வெற்றி பெற்றார். 83 வயதான பார்வதி 8-ம் வகுப்பு வரை படித்தவர்.