மதுரையில் ஊராட்சி மன்ற தலைவராக 79 வயது மூதாட்டி ஒருவர் தேர்வாகி உள்ளார்.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 79 வயது மூதாட்டி வீரம்மாள் அழகப்பன். இவர் 193 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் பதவிகளுக்கு 181 பேர், ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு 1,555 பேர், ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 2,467 பேர், ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 8,169 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் 77.14 சதவீத வாக்குகள் பதிவாயின. வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 79 வயது மூதாட்டி வீரம்மாள் அழகப்பன் வெற்றி பெற்றுள்ளார்.
இதற்குமுன்னர் இவர் உள்ளாட்சித் தேர்தலில் 2 முறை போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் இந்த முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.