மதுரை செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பிற்பகல் நிலவரப்படி 4 ஊராட்சித் தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மதுரை மாவட்டத்தில் விறுவிறுப்பாக அறிவிக்கப்பட்டு வருகிறது. செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் இதுவரை நான்கு ஊராட்சித் தலைவர்கள் அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றுள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவைச் சேர்ந்த பானாமூப்பன்பட்டி ஊராட்சி தலைவருக்கான தேர்தலில் மகாராஜன் 311 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
உசிலம்பட்டி தாலுகா சக்கரப்பநாயக்கனூரைச் சேர்ந்த ஜென்சிராணி என்பவர் ஊராட்சித் தலைவர் தேர்தலில் 147 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சந்தானத்தின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
போடுவாா்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி 80 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். எரவார்ப்பட்டி ஊராட்சியில் பாண்டி என்பவர் 200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற நால்வருக்கும் தேர்தல் அலுவலர் சரஸ்வதி வெற்றி சான்றிதழ்களை வழங்கினார்.