வத்தலகுண்டு பஸ் நிலைய குப்பைகளை அகற்றி சுத்தமாக வைத்திருந்த மனநோயாளி ரெங்கராஜனை நேற்று திருச்சி தனியார் மனநலக் காப்பகத்தினர் மீட்டனர்.
வத்தலகுண்டு பஸ்நிலை யத்தில் பயணிகள், கடைக் காரர்கள் வீசும் குப்பைகளால் பஸ் நிலையம் சுகாதார மில்லாமல் இருந்தது.
கடந்த இரண்டு மாதங் களுக்கு முன், கொடைக்கான லில் இருந்து வத்தல குண்டு வந்தவர் ரெங்கராஜன் என்கிற மன நோயாளி. இவர் பயணி கள் வீசும் குப்பைகளை தேங்கவிடாமல் பஸ்நிலை யத்தை சுத்தப்படுத்தி வந்தார். இதன் காரணமாக பஸ்நிலை யம் சுத்தமாகக் காட்சி அளித் தது. அவரது செயலைப் பார்த்த கடைக்காரர்களும், பயணி களும் மனம் திருந்தி இப் போதெல்லாம் குப்பைகளை கண்ட இடங்களில் போடுவது இல்லை. இதுகுறித்து ‘தி இந்து’ நாளிதழில் ஆக. 14 மற்றும் 20-ம் தேதிகளில் செய்தி வெளியானது.
இந்நிலையில், ரெங்க ராஜனை மீட்டு மருத்துவச் சிகிச்சை அளித்து உறவினர் களிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இதையடுத்து, நேற்று மாவட்ட நிர்வாகம் மூலம் திருச்சி சாந்திவனம் மன நலக் காப்பக ஊழியர்கள் ரெங்க ராஜனை மீட்க வத்தலகுண்டு பஸ்நிலையம் வந்தனர். வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் வினோஜி மற்றும் போலீஸார் துணையுடன் சென்ற காப்பக ஊழியர்கள், ரெங்கராஜ னுக்கு மயக்க ஊசி போட்டு அழைத்துச் செல்ல தயாராகி னர். அப்போதும் ரெங்கராஜன், பஸ்நிலையத்தில் கிடந்த குப் பைகளை அகற்றிக் கொண்டி ருந்தார்.
மனநலக் காப்பக மருத்து வர் ராமகிருஷ்ணன் ரெங்க ராஜனை நெருங்கி அவரது குடும்பத்தை பற்றி விசாரித் தார். சில நிமிடம் அமைதி யாக இருந்த ரெங்கராஜன், பின்னர் தனது மனைவியும், குழந்தையும் புதுக்கோட்டை யில் இருக்கிறார்கள் என்றார். இதையடுத்து, அவரை மன நலக் காப்பக ஊழியர்கள் வேனில் திருச்சிக்கு அழைத்துச் சென்றனர். வத்தலகுண்டு பஸ் நிலையத்தில் இருந்து புறப் பட்ட ரெங்கராஜனை கடைக் காரர்கள், பயணிகள் திரண்டு நின்று வழியனுப்பி வைத்தது நெகிழ்ச்சியாக இருந்தது.