தமிழகம்

5 ஆயிரம் நீர்நிலைகள் தமிழகத்தில் அழிந்துவிட்டன: ஆர்.நல்லகண்ணு ஆதங்கம்

செய்திப்பிரிவு

ஆக்கிரமிப்பால் தமிழகத்தில் சுமார் 5 ஆயிரம் நீர்நிலைகள் காணாமல் போய்விட்டதாகவும், பல அரசு அலுவலகங்களே நீர் நிலைகளை ஆக்கிரமித்துதான் கட்டப்பட்டுள்ளன என்றும் இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.

கொங்கு மண்டல நீர்வழிப் பாதை மீட்பு மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு மாநாடு கோவையில் நேற்று நடைபெற்றது.

அப்போது அவர் பேசியதாவது:

கோவையில் இருந்து 170 கி.மீ.க்கு நொய்யல் நதி பாய்கிறது. முதல்கட்டமாக கரையை ஒட்டி யுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது அவசியம். இதேபோல, பிற மாவட்டங்களிலும் நீர்வழிப் பாதை மீட்பு மாநாடுகள் நடத்தி, அந்தந்தப் பகுதிகளிலுள்ள நீராதாரங்களை மீட்டெடுக்க திட் டமிடப்பட்டுள்ளது.

அனைத்து நதிகளையும் இணைக்கும் தீர்மானம் அரசிடம் உள்ளது. அதை துரிதப்படுத்தி, நடைமுறைப்படுத்த வேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களையும், தீர்மானங் களையும் செயல்படுத்த வேண்டும். ஏற்கெனவே உள்ள திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தால் மட்டுமே, நீர்வழிப் பாதைகளை மீட்கும் முயற்சியை எளிதாக செயல்படுத்த முடியும்.

நதி எங்கெங்கு செல்கிறதோ, அங்கெல்லாம் நதிகளை இணைப் பது மாநிலங்களுக்கு இடையே யான உறவை பலப்படுத்தும். இதற்கு மத்திய அரசு உதவ வேண்டும். ஆக்கிரமிப்பால், தமிழகத்தில் சுமார் 5 ஆயிரம் நீர் நிலைகள் காணாமல் போய்விட்டன. மதுரை மாநக ராட்சி அலுவலகம் உட்பட பல அரசு அலுவலகங்களே நீர்நிலை களை ஆக்கிரமித்துதான் கட்டப் பட்டுள்ளன.

எனவே, நீர்வழிப் பாதைகளை மீட்டு, நீர்நிலைகளை காக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கொங்கு மண்டலத்தின் நீரா தாரமான நொய்யல் நதியைப் பாதுகாக்க வேண்டும்; அவிநாசி - அத்திக்கடவு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; விவசாயத் துக்கென மத்திய அரசு தனி பட்ஜெட் கொண்டுவர வேண்டும்; நீர்ப்பாசன முறைகளை பாதுகாக்க வேண்டும் என்பன உட்பட 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நதிகளை இணைப்பது மாநிலங்களுக்கு இடையே யான உறவை பலப்படுத்தும். ஆக்கிரமிப்பால், தமிழகத்தில் சுமார் 5 ஆயிரம் நீர் நிலைகள் காணாமல் போய்விட்டன.

SCROLL FOR NEXT