சிறுநீர்ப்பை தொற்றுநோய் சிகிச் சைக்காக பேரறிவாளன் மீண்டும் சென்னை புழல் சிறைக்கு மாற்றப் பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் வேலூர் சிறை யில் உள்ளார். கடந்த ஓராண்டாக சிறுநீர்ப்பை தொற்று நோயால் பேரறிவாளன் பாதிக்கப் பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 29-ம் தேதி வேலூர் அரசு மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு பரிந் துரை செய்யப்பட்டார். இதற்காக, வேலூர் மத்திய சிறையில் இருந்து கடந்த ஜூன் 6-ம் தேதி சென்னை புழல் சிறைக்கு பேரறிவாளன் மாற்றப்பட்டார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் கடந்த மாதம் 10-ம் தேதி மீண்டும் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வேலூர் மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளனை நேற்று காலை 8.55 மணிக்கு அழைத்துச் சென்றனர். காலை 11 மணியளவில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மருத் துவ பரிசோதனைகள் முடிந்து மீண்டும் அவர் வேலூர் சிறைக்கு மாற்றப்படுவார் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.